தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கும், திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி காலியாகவுள்ள திருவாரூர், அதிமுக உறுப்பினர் ஏ.கே.போஸ் இறந்ததால் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை திமுகவும் அதிமுகவும் முடுக்கி விட்டுள்ள நிலையில் அந்தத் தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்குகளை இங்கே கொடுத்துள்ளோம். அதிமுக உடைந்து, திமுகவுடன் புதிய கட்சிகள் அணி அமைத்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க இது உதவும் என்று நினைக்கிறோம்...
திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளும், அவர்களுக்கு அடுத்தபடியாக வந்த கட்சி வாங்கிய வாக்குகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன...
1.ஆண்டிபட்டி
டி.தங்கதமிழ்செல்வன் (அதிமுக) 1,03,129
எல்.மூக்கையா, (திமுக) 72,933
எம்.என்.கிருஷ்ணமூர்த்தி (தேமுதிக) 10,776
2.பெரியகுளம் (தனி)
டாக்டர் கே. கதிர்காமு (அதிமுக) 90,599
வீ.அன்பழகன், (திமுக) 76,249
ஏ.லாசர், எம்.எல்.ஏ., (மா.கம்யூ.) 13,525
3.பெரம்பூர்
வெற்றிவேல் (அதிமுக) 79,974
என்.ஆர்., தனபாலன் (திமுக) 79,455
அ.சவுந்தர்ராஜன் (மா. கம்யூ.,) 10,281
4.ஆம்பூர்
பாலசுப்பிரமணி (அதிமுக) 79,182
நசீர் அகமது (ம.ம.க) 51,176
வாசு (தேமுதிக) 7,043
5.தஞ்சாவூர்
ரங்கசாமி (அதிமுக) 101333
அஞ்சுகம் பூபதி (திமுக) 74,487
எம்.எஸ். ராமலிங்கம் (பாஜ) 3806
6.அரூர் தனி
முருகன் (அதிமுக) 64,568
ராஜேந்திரன் (திமுக) 53,147
கோவேந்தன் (விசி) 33,632
முரளி (பாமக) 27,747
7.அரவாக்குறிச்சி
வி.செந்தில் பாலாஜி (அதிமுக) 88068
கே.சி.பழனிச்சாமி (திமுக) 64407
எஸ்.பிரபு (பாஜ) 3162
8.நிலக்கோட்டை
தங்கதுரை (அதிமுக) 85,507
அன்பழகன் (திமுக) 70731
ராமசாமி (தேமுதிக) 7609
வாக்கு வித்தியாசம் 14776
9.மானாமதுரை (தனி)
எஸ்.மாரியப்பன்கென்னடி (அதிமுக) 89,893
எஸ்.சித்ராசெல்வி (திமுக) 75,004
தீபா அன்பழகன் (விசி) 7,493
10.குடியாத்தம் தனி
ஜெயந்தி பத்மநாபன் (அதிமுக) 94,689
ராஜமார்த்தாண்டன் (திமுக) 83,219
பூ.தீபா (பாமக) 7,505
11.விளாத்திகுளம்
உமாமகேஸ்வரி (அதிமுக) 71,496
ச.பீமராஜ் (திமுக) 52,778
கதிர்வேல் (தமாகா) 15,030
12.திருப்போரூர்
கோதண்டபாணி (அதிமுக) 70,215
விஸ்வநாதன் (திமுக) 69,265
பி.வி.கே.வாசு (பாமக) 28,125
மல்லை சத்யா (மதிமுக) 25,539
13.சாத்தூர்
எஸ்.ஜி.சுப்பிரமணியன் (அதிமுக) 71,513
எஸ்.வி.சீனிவாசன் (திமுக) 67,086
ரகுமான் (மதிமுக) 25,442
14.திருப்பரங்குன்றம்
(2016 சட்டமன்றப் பொதுத்தேர்தலில்)
சீனிவேல் (அதிமுக) 93,453
மு. மணிமாறன் (திமுக) 70,461
க.கந்தசாமி (இ.கம்யூ.,) 15,295
(சீனிவேல் இறந்ததால் இடைத்தேர்தலில்)
ஏ.கே. போஸ் (அதிமுக) 1,13,032
சரவணன் (திமுக) 70362
சீனிவாசன் (பாஜ) 6930
தனபாண்டியன் (தேமுதிக) 4105
15.பாப்பிரெட்டிபட்டி
பி.பழனியப்பன் (அதிமுக) 74,234
சத்தியமூர்த்தி (பாமக) 61,521
பிரபு ராஜசேகர் (தி.மு.க.) 56,109
பாஸ்கர் (தே.மு.தி.க.,) 9,441
16.சோளிங்கர்
பார்த்திபன் (அதிமுக) 77,651
முனிரத்னம் (காங்.) 67,919
க.சரவணன் (பாமக) 50,827
மனோகர் (தே.மு.தி.க.,) 6,167
17.திருவாரூர்
மு.கருணாநிதி (திமுக) 1,21,473
பன்னீர்செல்வம் (அதிமுக) 53,107
பி.எஸ்.மாசிலாமணி (இ.கம்யூ.) 13,158
18.பரமக்குடி தனி
டாக்டர் எஸ்.முத்தையா (அதிமுக) 79,254
உ.திசைவீரன் (திமுக) 67,865
பொன்.பாலகணபதி (பாஜ) 9,537
19.ஒட்டப்பிடாரம் (தனி)
சுந்தரராஜ் (அதிமுக) 65,071
கிருஷ்ணசாமி (புத) 64,578
ஆறுமுக நயினார் (தேமுதிக) 14,127
20.பூந்தமல்லி
ஏழுமலை (அதிமுக) 1,03,952
பரந்தாமன் (திமுக) 92,189
பார்த்தசாரதி (பாமக) 15,827
கந்தன் (மதிமுக) 15,051