Skip to main content

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னணி என்ன..? - ஆ.ராசா பேச்சு!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

ர

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா நடப்பு அரசியல் குறித்து பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "தேர்தல் வர இருக்கின்ற நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களைத் தற்போது அறிவித்து வருகிறார். இதற்குப் பின்புலம் என்ன இருக்கிறது என்பதை நாம் நன்கு ஆராய வேண்டும். உதாரணமாக, விவசாயக் கடனை அவர் தள்ளுபடி செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘தற்போதைய சூழ்நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது தேவையில்லாத ஒன்று. நல்ல நீர்வளம், விவசாயம் செய்கின்ற சூழ்நிலை தற்போது அதிகம் இருப்பதால், அதற்கான அவசியம் ஏற்படவில்லை’ என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அது சட்டப்படி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எங்களுடைய தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அவர் அவ்வாறு தெரிவித்த பிறகு, தற்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த நெருக்கடியைக் கொடுத்தது நாங்கள்.

 

கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறியது நாங்கள். நாங்கள் அவ்வாறு கூறியதும் நெருங்கடி தாங்க முடியாமல் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்று அறிவிக்கிறார். இன்று தமிழக அரசு ஏதாவது நலத்திட்டங்களை ஒன்றிரண்டு அறிவித்துள்ளது என்றால் அதற்கு எடப்பாடி பழனிசாமியின் சொந்தப் புத்தி காரணமல்ல, அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தந்த புத்திதான் இருக்கிறது. இப்போது மும்முனை மின்சாரம் என்று ஒன்று இருக்கிறது. அதைத் தற்போது 24 மணி நேரமும் கொண்டு வரப் போகிறேன் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அடித்துக்கொண்டிருக்கும் ஊழல் சொல்லி மாளாது. இந்த ஆட்சி மாறியதும் சிறைக்குச் செல்லக்கூடிய நபர்களில் மிக முக்கியமான நபராக அமைச்சர் தங்கமணி இருப்பார். இன்றைக்கு ஒரு யூனிட் 7 ரூபாய் என்ற அளவில் மின்சாரத்தை வெளியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த மும்முனை மின்சாரத் திட்டத்தில் தற்போது அடிக்கின்ற கொள்ளை போல அதிகம் அடிப்பதற்கான திட்டம் உள்ளது என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். 

 

கலைஞர் முதல்முறை ஆட்சி செய்தபோது, அந்த ஐந்தாண்டு காலத்தில் 5.5 லட்சம் மோட்டார்களுக்கு மின் இணைப்பு கொடுத்தார். இந்த 10 ஆண்டுகளில் நீங்கள் கொடுத்திருக்கும் பம்புசெட் மின் இணைப்புகள் எத்தனை? இதுவரை நீங்கள் கூறிய கணக்கு 1.5 லட்சம் என்று சொல்லி இருக்கிறீர்கள். இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், 5 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்கு மனு போட்டுவிட்டு அனுமதிக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். 5 லட்சம் குடும்பங்களுக்கு விளக்கேற்ற உங்களுக்கு யோக்கிதை இல்லை. அவர்களுக்கு வழங்க மின்சாரம் இல்லை. ஆனால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள், மின் மிகை மாநிலம் என்கிறீர்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த மும்முனை மின்சாரத் திட்டத்தை திமுக வரவேற்றாலும், இதன் பின்னால் பெரிய ஊழல் திட்டங்களுக்கு அரசு வழிகோல பார்க்கிறது என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. எனவே மின்சாரம் கேட்பவர்களுக்கு முதலில் அதை வழங்குவதற்கு வழி செய்யாமல், கொள்ளையடிப்பதற்கு வழி தேட வேண்டாம் என்று இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

 

Next Story

“மற்றவர் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள்” - அண்ணாமலை

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

annamalai covai airport press meet talks about rasa speech 

 

மற்றவர் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

கலைஞரின் பேனா மையால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  ஐபிஎஸ் ஆனார் என திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசி இருந்தார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார்.

 

அப்போது அவர், "நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு என்ஜினீயரிங், மருத்துவம் படித்தவர்களின் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி சொந்தம் கொண்டாடுகின்றனர். இன்னொருவரின் குழந்தைக்கு ஏன் பெயர் வைக்கிறீர்கள். கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர்களில் எத்தனை பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆனார்கள். ராசா குடும்பத்தில் ஏன் யாரும் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆகவில்லை" எனக் கேள்வி எழுப்பி உள்ளார். 

 

 

Next Story

"இந்த நூறு வருடத்தில் பிளவை சந்திக்காத ஒரு இயக்கம் ஆர்எஸ்எஸ்... அதற்கு காரணம்.." - இடும்பாவனம் கார்த்திக்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

kl;

 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இந்து மதம் தொடர்பாக ஆ.ராசா பேசியது மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்த இருக்கும் பேரணி தொடர்பான செய்திகள் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆ.ராசாவுக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின் வருமாறு, 

 


கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுஸ்மிருதியில் காட்டப்பட்டுள்ளதாக சில கருத்துக்களை ஆ.ராசா பொதுக்கூட்ட மேடையில் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அளவில் கடுமையான எதிர்வினைகளை பாஜக தரப்பு செய்துவருகிறார்கள். ஆனால் ஆ.ராசா குறித்து பேசிய உங்கள் தலைவர் சீமான், அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்றார். இதனை எப்படிப் புரிந்துகொள்வது, அவரின் திடீர் ஆதரவு என்பது ஆ.ராசாவின் கருத்து மட்டும்தானா? இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன?

 

ஆ.ராசாவின் கருத்து இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்கிறார்கள். மனுஸ்மிருதியில் ஏற்றத்தாழ்வுகள் காட்டப்பட்டதா இல்லையா? தற்போது என்ன சொல்கிறார்கள், மனுஸ்மிருதி தற்போது நடைமுறையில் இல்லை என்கிறார்கள். அப்படியென்றால் சில இடங்களில் இடதுசாரி தோழர்கள் மனுஸ்மிருதியை கொளுத்தும் போராட்டத்தை நடத்தும் போது எதற்காக பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். நடைமுறையில் இல்லாத ஒன்றை எதிர்த்து எதற்காக பாஜக போராடுகிறது. இவர்கள் மனுதர்ம ஆட்சி நடத்தவே விரும்புகிறார்கள். அவர்கள் எண்ணம் அதுதான் என்பதைப் பலமுறை அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அரசியலமைப்பை விட இவர்கள் இந்த முறையிலான ஆட்சி நடத்தவே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் வெளியில்  கூறுவது ஜனநாயக ஆட்சி என்பார்கள். நடைமுறையில் அவர்களின் செயல்பாடுகள் மனுதர்மத்தின் அடிப்படையிலேயே இருக்கும். அண்ணன் ஆ.ராசா சொல்வதில் எந்த தவறும் இல்லை. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. 

 

இந்தியாவில் இருக்கும் எந்த மதமும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துவதில்லை. அதன் கோட்பாடுகளைக் கொள்கைகளாக வைத்திருக்கவில்லை. ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக வைத்துள்ள மதமாக இந்து மதம் இருக்கிறது என்று ஆ.ராசா கூறியதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் ஆண், பெண்ணாக மாறலாம், பெண் ஒரு ஆணாக மாறலாம். ஆனால் ஒரு சாதியில் பிறந்த ஒருவர் மற்றொரு சாதிக்கு மாற முடியாது. குறிப்பிட்ட சாதியினர் இன்றளவும் நிமிர்ந்து நடக்கக் கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது, சாலையில் நடந்து செல்லக் கூடாது என்ற காட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றது. இதற்கு ஆதி மூலமாக இந்த மனுதர்மம் இருக்கிறது. அதனை எப்படி நாம் எதிர்க்காமல் இருக்க முடியும். 

 


கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட நாங்கள் அனைத்து மக்களுக்கும் சேர்ந்தே போராடுகிறோம், இந்த மனுஸ்ருமிதி கூட தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் இந்த விவாதம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள், இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 


மனுஸ்மிருதியில் எங்கேயாவது ஜாதி இல்லை என்று கூறியிருக்கிறதா? அப்படி இருந்தால் அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்து மதத்தின் அடிப்படையே ஜாதி என்ற ஒரு அமைப்பு சுற்றிவருவதாகவே அமைத்துள்ளார்கள். இதை யாரும் மறுக்க முடியுமா? விளிம்பு நிலை மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம் என்று இன்றைக்குக் கூறுகிறார்கள். அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக, விளிம்பு நிலை மக்களாக இத்தனை ஆண்டுக்காலம் வைத்திருந்தது யார். இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா? சாதிக் கலவரம் நடக்கும் இடங்களில் இவர்கள் சென்று நாம் எல்லோரும் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுவார்களா? அவ்வாறு இதுவரைக்கும் எந்த இடத்திலாவது சென்று இவர்கள் கூறியிருக்கிறார்களா? என்பதை உங்களுக்கு தெரியவந்தால் கூறுங்கள். ஆ.ராசா கருத்து சரியாகப் பட்டதால் அவரை ஆதரிக்கிறோம். அதைத்தாண்டி வேறு எதுவுமில்லை. 

 

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் விரைவில் பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜனநாயக அமைப்பு கிடையாது. அதற்கு ஜனநாயகத்தின் மீது துளியளவு நம்பிக்கையும் கிடையாது. இந்த அமைப்பு மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. காலக்கொடுமை, அந்த அமைப்பில் வழிவந்த பாஜக இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அகண்ட பாரதம் என்ற ஒரே தேசத்தை அமைக்க நினைக்கிறார்கள். அவர்களை யார் தோலுரித்துக் காட்டுகிறார்களோ அவர்களை எதிர்த்து இவர்கள் கம்பு சுற்றுகிறார்கள். ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது, விரைவில் மக்கள் முன் அவமானப்பட்டுப் போவார்கள் என்பது மட்டும் நிஜம்.

 


இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்ட இந்த நூறாண்டுக் காலத்தில் அது தொடங்கப்பட்ட நோக்கத்தை இலக்காக வைத்து பயணத்தை மேற்கொண்டு வருகிறது. ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டுக் காலம் பிளவு பெறாத வண்ணம் இருக்கிறது என்றால் அது ஆர்எஸ்எஸ் இயக்கம் மட்டும்தான். ஏனென்றால் அந்த அமைப்புக்கு ஆட்சி அமைக்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற எந்த ஒரு நோக்கமும் இல்லை. மாறாக இந்து ராஷ்டிரா, அதாவது இந்தியா முழுவதும் இந்து மதமே ஆட்சி செய்ய வேண்டும், மாற்று மதத்தினரை வாக்கற்ற மக்களாக அகதிகளாக வைக்க வேண்டும் அல்லது அனைவரையும் இந்துக்களாக மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துள்ளனர். இதை நோக்கியே அவர்கள் தங்களின் செயல்பாடுகளை வைத்துள்ளார்கள்.