கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆண்டுக்கான நீட் தேர்விலும் வழக்கமான கெடுபிடி நடவடிக்கைகளைக் கையாண்டு, மாணவ- மாணவிகளை அதிரவச்சிருக்கு மத்திய அரசு. மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசின் தயவோடு நீட் கொடுமை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நீட் தேர்வால் அனிதா, பிரதீபான்னு வருசத்துக்கொரு உயிரைப் பறிச்ச நீட்டை எதிர்த்து தமிழ்நாடு போராடிக்கிட்டிருக்கு. இந்திய அளவில் இந்த ஆண்டுக்கான 57 ஆயிரம் மருத்துவக் கல்லூரி சீட்டுகளுக்காக, பல லட்சம் மாணவ, மாணவிகள் 5-ந் தேதி நீட் தேர்வை எழுதியிருக்காங்க.
தமிழகத்தில் மட்டும் 108 தேர்வு மையங்கள்ல ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் மாணவ- மாணவிகள், நீட் தேர்வை எதிர்கொண்டிருக்காங்க. இந்த முறையும் தேர்வெழுதப் போன மாணவர்களின் முழுக்கை சட்டையை வெட்றது, மாணவிகளின் கூந்தலை அவிழ்த்து, அவர்களைத் தீவிரவாதிகளைப் போல சோதனை பண்றதுன்னு ஏக கெடுபிடிகளைக் காட்டியிருக்காங்க. பல தேர்வு மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கூட ஏற்பாடு செய்யப்படலை.
எனினும் இந்தமுறை மாணவ- மாணவிகள் தேர்வுக்குக் கொஞ்சம் தயாராக வந்திருந்ததால், பரீட்சையை எழுதிட்டாங்க. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அடுத்த வருசம் நீட் இருக்காதுங்கிறதுதான் தமிழக மாணவர்களின் கடைசி நம்பிக்கையாக இருந்து வருகிறது. மே 23ஆம் தேதிக்கு பிறகு மாணவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு முடிவுகள் வருமா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.