![iswarya murugan movie third song released](http://image.nakkheeran.in/cdn/farfuture/nlO7wrK7v_C5hhy_wNayAMvpytiXZXcXJmoerRpKg_s/1639820876/sites/default/files/inline-images/murugan_117.jpg)
கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம், தற்போது ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தை இயக்கிவருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கருப்பன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண் பன்னீர்செல்வம், வித்யா, ஹரிஷ் லல்வானி, ஸ்ரீ சாய் சங்கீத் உள்ளிட்ட பல புதுமுக நடிகர்களை வைத்து ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை மாஸ்டர் பீஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே. வினோத் ஆகியோர் தயாரிக்க, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். காதல் திருமணத்திற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..’ என்ற படத்தின் மூன்றாவது பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி வரிகளில், கிராமிய பாடகர் முத்துசிற்பி குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.