![M. Thiyagarajan](http://image.nakkheeran.in/cdn/farfuture/GrcqUK_5o0PJ1gnHT47KaYxXNzsqz-530XMdwx5G9pw/1638960501/sites/default/files/inline-images/44_41.jpg)
ஏ.வி.எம் நிறுவனத்தின் 150ஆவது படமான 'மாநகர காவல்' படத்தை இயக்கியவர் எம்.தியாகராஜன். விஜயகாந்த் நாயகனாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் தவிர்த்து, வெற்றி மேல் வெற்றி, பொண்ணு பார்க்க போறேன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
அருப்புக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட எம்.தியாகராஜன், பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையிலும், தொடர்ந்து சென்னையிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு எதிரே உள்ள ப்ளாட்பாரத்தில் எம்.தியாகராஜன் இறந்தநிலையில் கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய வடபழனி போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/fZPIwjaaMvCawhouhKVxxIJN32kUHJwxsoInDWo_SYg/1638960605/sites/default/files/inline-images/ik-ad_10.jpg)
அங்கிருந்த ஒரு டீக்கடையில் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த எம்.தியாகராஜன், 'மாநகர காவல்' படத்தின் இரண்டாம் பாகத்தை தான் எடுக்க விரும்புவதாக அங்கிருந்தவர்களிடம் கூறிவந்துள்ளார். ஏ.வி.எம் நிறுவனத்தின் 150ஆவது படத்தை இயக்கிய இயக்குநர் ஒருவர், அந்த ஸ்டூடியோவிற்கு எதிரிலேயே இறந்து கிடந்தது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.