
ஓட்டலில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள ஹோட்டலில் 3 சாப்பிட்டுள்ளனர். இதற்குக் கடையின் உரிமையாளர் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த 3 பேர் கொண்ட கும்பல் ஹோட்டல் உரிமையாளரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
மேலும் இந்த கும்பல் செம்பரம்பாக்கத்தில் ஹோட்டல் நடத்திவரும் இளவரசு என்பவர் மீதும் இந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதோடு இந்த கும்பல் அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டி பணம் பறித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் ஒரே இரவில் வெவ்வேறு 3 இடங்களில் 3 பேரை அரிவாளால் வெட்டி பணத்தைப் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.