![Nandamuri Balakrishna gifts new Porsche to Thaman](http://image.nakkheeran.in/cdn/farfuture/aX7OCtmS-KP-BaxWvr6aYhQBM1S1t3ag0kxGZzT26OI/1739604603/sites/default/files/inline-images/135_41.jpg)
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் தமன், மற்ற மொழிகளை விட தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். அங்கு முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், மகேஷ் பாபு, ராம் சரண் உள்ளிட்ட பல்வேறு கதாநாயகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணா தற்போது தமனுக்கு விலையுர்ந்த போர்ஷ்(Porsche) காரை பரிசாக வழங்கியுள்ளார். பாலகிருஷ்ணா நடிப்பில் கடைசியாக வெளியான நான்கு படங்களுக்கு தொடர்சியாக தமன் இசையமைத்திருந்தார். அதில் கடைசி படமான ‘தாகு மஹாராஜ்’ சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் தமனை பாராட்டி இந்த பரிசை வழங்கியுள்ளதாக பாலகிருஷ்ணா தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமன் இப்போது பாலகிருஷ்ணா நடித்து அகண்டா 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்த்து தெலுங்கில் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’, பவன் கல்யாணின் ‘ஓஜி’, தமிழில் ஆதி நடிக்கும் சப்தம், சஞ்சய் ஜேசன் இயக்கும் படம் ஆகியவற்றிக்கு இசையமைக்கிறார். மேலும் இந்தியிலும் ஒரு படத்துக்கு இசையமைத்து வருகிறார் என்பது நினைவுகூரத்தக்கது.