![krishna 25th movie update](http://image.nakkheeran.in/cdn/farfuture/K0Iuke7dynGT-MLdMDrtUL2RtOzf2gGt4rpodYOYdTE/1739598017/sites/default/files/inline-images/139_39.jpg)
அஞ்சலி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஹீரோவாக நடித்து பிரபலமானவர் கிருஷ்ணா. இவர் தற்போது ஹீரோவாக 25வது படத்தில் நடிக்கிறார். அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையசம் கொண்டுள்ளது.
இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கே.கே.25’ என தலைப்பிட்டிருக்கும் நிலையில் மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் மஹேந்திர ராஜ் சந்தோஷ் குமார் தயாரிக்க இயக்குநர் பால கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திரைத்துறையில் களமிறங்குகின்றனர். முன்னதாக இயக்குநர் பால கிருஷ்ணன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'ரிபெல்' திரைப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.