Skip to main content

“அம்மா போதாதுன்னு இப்போ புதுசா அப்பா வேற” - லெனின் பாரதி விமர்சனம்

Published on 15/02/2025 | Edited on 15/02/2025
lenin bharathi criticised mk stalin

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு காணொளி வாயிலாகப் பதிலளித்துள்ளார். அந்த காணொளியில் அப்பா எனும் பொறுப்பு என்ற கேள்வியில் ஆரம்பித்து பெண்களுக்கான கல்வி , கூட்டணிக் கட்சி முரண்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட ஒன்பது கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த வீடியோ ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.    

இந்த காணொளியை மேற்கோள் காட்டி திரைப் பிரபலங்கள் தற்போது தங்களது கருத்தை பதிவிட்டு வர தொடங்கியுள்ளனர். முதலில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வரை டேக் செய்து, தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டு சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக பதிவிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் லெனின் பாரதி அவரது எக்ஸ் பக்கத்தில், “ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ‘அம்மா’ இருந்தது போதாதுனு இப்போ புதுசா ஒரு ‘அப்பா’ வேற வந்துருக்கார். தமிழ்நாட்டு மக்களை என்னா நெனச்சுக்கிட்டு இருக்காங்கனு தெரியல” என விமர்சித்து குறிப்பிட்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்