முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகனே அப்பாவை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
15 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது. மதுரை மெடிக்கல் காலேஜ் படிக்கும் இருவர் காதலித்து வருகிறார்கள். இருவரும் படித்து முடித்து விட்டு லண்டனுக்கு சென்று விடுகின்றனர். என்னிடம் அந்த பையன் தொடர்பில் கொண்டு இதுபோல தான் காதலிப்பது அப்பாவிற்கு தெரியாது என்றும் அப்பாவினால் தன் திருமணத்தில் பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் அப்பாவை பின்தொடர்ந்து காவல் காக்குமாறு கேட்டு கொண்டார்.
மேலும் விவரம் கேட்டதில் தன் அம்மாவிற்கு இந்த விஷயம் தெரியும் என்றும் அப்பாவிடம் தான் பேசுவதில்லை என்றார். தன் அப்பாவும் அம்மாவும் இவர் 10 வயதில் இருக்கும் போது பிரிந்து விட்டனர். ஆனால், விவாகரத்து வாங்கவில்லை என்று தெரிய வந்தது. தனது அப்பா ஏதேனும் திருமணத்தின் போது பிரச்சினை தருவாரோ என்று யோசித்து தான் எங்கள் உதவியை நாடினார். எனவே நாங்கள் அப்பாவை பின் தொடர ஆரம்பித்தோம்.
அப்பா அரசியல் பின்னணியில் இருக்கிறார் என்று தெரிய வந்தது. மகனது திருமணம் முடியும் வரை கார்ட் வைத்து செக்யூரிட்டி ஃபோர்ஸ் கொடுக்கபட்டது. பிரச்சனை இன்றி கல்யாணம் நடைபெறும் வரை காவல் வைத்திருந்தோம். திருமணமும் நன்றாக நடந்து முடிந்து இவர்கள் மீண்டும் லண்டனுக்கு செல்ல சென்னை ஏர்போர்ட் வரை காவல் வைத்து தான் அனுப்பி வைத்தோம். இவர்களது திருமணம் முடிந்த பிறகு, அவரது தந்தை இந்த பையனுடைய அம்மாவை பிரிந்ததும் இன்னொரு திருமணம் ஒரு குடும்பத்தை வைத்திருக்கிறார் என்ற உண்மையை சொன்னோம். மகனுக்கு மன உளைச்சலை மேலும் கொடுக்க வேண்டாம் என்று திருமணம் முடியும் வரை சொல்லவில்லை. அதன் பிறகு தான் கண்டுபிடித்த ஆதாரங்களை வைத்து பையனிடம் விஷயத்தை சொன்னோம். வேறொரு திருமணமானதால் தான், மகன் திருமணம் செய்து கொள்ளும் விஷயத்தை அவ்வளவாக பெரிதாக கவனிக்கவில்லை என்று பின்னர் புரிந்தது.