தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அவசரமாக ஒரு நபர் ஒருநாள் என்னுடைய அலுவலகத்தில் வந்திருந்தார், அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்கமுடியாது என்பதால், நான் அனுமதிக்காமல் இருக்க, சிறிது நாள் கழித்து அப்பாயின்மென்ட் வாங்கியபின் நான் அவரை சந்தித்தேன். அவரும் மிக பதற்றமாக என்னிடம் பேசினார். தான் ஒரு விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்தவர் என்றும், இப்போது அந்த பெண் தன்னை வீட்டினுள்ளே விடுவதில்லை என்றும் பதற்றமாக பேசினார். என்ன ஆனது என்று கேட்டபின் தான் சொல்ல ஆரம்பித்தார்.
அந்த பெண்ணை அவர் முதலில் ஒரு தெரிந்த விழாவில் சந்தித்ததாகவும், பிடித்திருந்ததால் விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே கோர்ட்டில் விவாகரத்து கேஸ் போய்க்கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது. பின்னர் கேஸ் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவளுக்கு முதல் கணவனால் வந்த குழந்தையையும் ஏற்று கொள்கிறார். திருமணம் ஆன பின்னர் இவர்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. இருவரையும் அவர் ஒன்றாக தான் வைத்து வளர்க்கிறார், ஆனால் மற்றவர்கள் சும்மா இல்லாது, அவர் தன்னுடைய குழந்தையை மட்டும் எப்படி கொஞ்சுகிறார் பார். தன் மகனை மட்டும் நன்றாக வளர்க்கிறார் என்று ஏற்றி விட, இவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி விடுகிறது.
இவர் வெளியில் சென்று சாதாரணமாக நண்பர்கள் என்று சந்தித்து வந்தாலும், உன் கணவனை நான் வேறொரு பார்ட்டியில் பார்த்தேன் என்றெல்லாம் அவளின் நண்பர்கள் கூற கூற இவளுக்கு தேவையில்லாத சந்தேகம் தானாக வருகிறது. வீட்டிற்கு வந்ததும் கணவனிடம் ஒழுங்காக பேசுவதில்லை, எது பேசினாலும் சரியாக பதிலளிப்பதில்லை. பார்ட்டி என்று சென்று வருவதை சொல்லிக் காட்ட, இவர் தனக்கு அது வெறும் பொழுதுபோக்கு தான் என்று சொல்லிவிட்டு, அடுத்தமுறை அவளையும் கூட்டி போவதாகச் சொல்கிறார். ஆனால் அவளை அழைத்துப் போக ஆபிசில் அதுவரை எந்த பார்டியும் நடக்கவில்லை. அதனை புரிந்துகொள்ளாமல் மேலும் கோவப்படுகிறாள்.
எல்லாரும் இல்லாததை சொல்ல சொல்ல, அந்த முதல் கணவனின் பதினாறு வயது மகன் அவரை வெறுக்கிறான். ஒருநாள் குடித்துவிட்டு வந்ததில், அந்த பதின்வயது பையன் மரியாதை இல்லாமல் பேச பிரச்சனை பெருசாக ஆகிறது.
கையை ஓங்குவது என்று அவரை அடக்கும் அதிகாரம் எடுத்துக் கொள்கிறான். அவருக்கென்று அவருடைய காரும் கொடுக்காமல், வாங்கிக் கொள்வது, பணத்தை எண்ணி பார்ப்பது போன்ற வேலையை எல்லாம் செய்கிறான். எல்லை மீறி அடிப்பது வரை ஆகிறது. ஒருநாள் அந்த பையனே குடிக்க ஆரம்பித்து விடுகிறான். தந்தை தடுக்க போய், பாட்டிலாலே அடித்து விடுகிறான். சின்ன பையனையும் அடக்கி வைத்திருக்கிறார்கள். இவருக்கு வீட்டில் மரியாதை இல்லை என்று தெரிய வருகிறது. வீட்டில் பணம் வைப்பதை நிறுத்தி விடுகிறார். சாப்பாடு போடுவது, கவனிக்கிறது என்று கிடையாது. தகராறு ஆகி வெளியே வந்து அப்போது தான் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று என்னிடம் வந்தார். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்ல, அங்கு கவனிக்காததால், கமிஷனருக்கு மெயில் அனுப்பினார். பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காவலர்கள் வீட்டிற்கு சென்று விசாரிக்க, இதனால் மேலும் அந்த அம்மா, பையன் என்று இவரிடம் அதிகமாக தகராறு செய்ய, மீண்டும் என்னிடம் வந்து என்ன செய்வது என்று நின்றார். எனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியை வைத்து அவர்கள் தரப்பில் பேச வைக்க ஏற்பாடு செய்யச் சொல்ல, அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் முடிவானது. போய் பேசவைப்பது என்று வாரக்கணக்கு ஆனது. ஆனாலும் அந்த அம்மாவிற்கு இவருடன் வாழ விருப்பமே இல்லை என்று தெரிய வந்தது. சரி வாழப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடலாமே என்று பேச, நான் இவரை விட்டு வெளியே தெருவிலா நிற்க முடியும். எனக்கும், என் பையனுக்கும் செய்ய வேண்டிய செட்டில்மென்டை கொடுக்கச் சொல்லுங்கள் என்றாள். சட்டப்படி அந்த பையனுக்கு பதினெட்டு வயது ஆனதால், அவனுக்கு இவர் செட்டில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவனே தான் வேலைக்கு போய் பார்த்து கொள்ளவேண்டும். பையனுக்கு நான் லீகல் கார்டியனாக இருக்கிறேன் என்று உறுதி அளித்தார்.
எனக்கு நிரந்தர ஜீவனாம்சம் எழுபது லட்சம் வேண்டும் என்று கேட்டாள். அவ்வளவு பணம் முடியாது என்று முழுமனதாக இவர் நிராகரிக்க கடைசியாக முப்பது லட்சம் வாங்கிக்கொள்ள ஒத்துக்கொள்கிறாள். அவரும் பையனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு, எப்போது வேண்டுமோ அவள் வந்து பார்க்கலாம் என்றும் தான் அனுமதிப்பதாகவும் சொல்கிறார். ஆனால் மாறாக, தன்னுடைய பிளாட்டிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றார். முடிந்தவரை மறுத்தாலும், இறுதியாக ஒத்துக்கொண்டு செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் தவணை செட்டில்மென்ட் குடுத்து, இருவர் பேரில் இருந்த வீட்டின் ஒரு பாதி தொகையை இவர் பெறுமாறு பெட்டிஷன் போட்டு, எல்லாம் தொகை குடுத்து முடிக்க ஆறு மாத காலம் ஆனது. டிவோர்ஸ் ஆன அன்று மாலையே வீட்டின் சாவியை கோர்ட்டில் வந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு சொல்லப்பட்டு கடைசியாக வழக்கு முடிந்தது.