பொறியியல் மாணவியை காதலன் உள்பட 3 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், என்டிஆர் மாவட்டம், பரிதலா கிராமத்தில் அம்ரித் சாய் என்ற பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், இரண்டாம் ஆண்டும் படிக்கும் மாணவி ஒருவரும், ஹுசைன் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தினத்தன்று தன்னுடைய அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று ஹுசைன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர், ஹுசைன் மட்டும் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதன் பிறகு, ஷேக் கலி ஷாஹித் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் மனமுடைந்த பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், இந்த சம்பவத்தில் ஈடுபட ஹுசைனுக்கும் ஷேக் கலிக்கும் சிந்தல் பிரபு தாஸ் என்பவர் உதவி செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகாரைத் தொடர்ந்து, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.