Skip to main content

அதிருப்தி தெரிவித்த விராட்; கோரிக்கை வைத்த பிசிசிஐ- ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

india test team

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா, அடுத்து இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. ஆனால் இங்கிலாந்து தொடருக்கு முன்னாள் இந்திய அணிக்கு பயிற்சியாட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பிறகு இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, பயிற்சி  ஆட்டங்களை தாங்கள் விரும்பியதாகவும், ஆனால் அவை தங்களுக்கு வழங்கப்படாததற்கு என்ன காரணம் என தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

 

இதனைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம், பயிற்சி ஆட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தது. இந்தநிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ஜூலை 20 முதல் 22 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் பயிற்சி ஆட்டத்தை ஏற்பாடு செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அணி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இங்கிலாந்தில் ஓய்வில் உள்ள இந்திய வீரர்கள், வரும் 14 ஆம் தேதி மீண்டும் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வருவார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.