பயிற்சியின் போது அணியும் உடையை, டி காக் போட்டியின் போது அணிந்து விளையாடியதால் ஸ்பான்சர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
13-வது ஐபிஎல் தொடரின் 32-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டி காக், அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி காக் போட்டியின் போது, பயிற்சி நேர உடையை அணிந்திருந்ததால் தற்போது அது பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து மும்பை அணியின் பயிற்சியாளரான ஜெயவர்த்தனே பேசுகையில், "டி காக் பயிற்சி நேர உடை அணிந்து விளையாடியதை தவிர்த்து மற்ற அனைத்தும் போட்டியில் சுமுகமாக இருந்தது. இதை மீண்டும் செய்யாதீர்கள் டி காக், இதனால் ஸ்பான்சர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்" எனப் பேசினார்.