13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 26-வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் தெவாத்தியா மற்றும் ரியான் களத்தில் நிற்க, ஹைதராபாத் அணியைச் சேர்ந்த கலீல் அந்த ஓவரை வீசினார். பந்தை அடித்துவிட்டு ரன்கள் எடுக்க ஓடும்போது, ராகுல் தெவாத்தியா மற்றும் கலீலுக்கு இடையே மோதல் வெடித்தது. உடனே நடுவர்களும், ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னரும் தலையிட்டு சமாதானப்படுத்தினர். ரியான் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச்செய்தவுடன், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. போட்டியின் முடிவில் பேசிய ராகுல் தெவாத்தியா, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "அது அந்த நேரத்தில் நடந்த கடுமையான வாக்குவாதம். அந்த நேரத்தில் இருவரும் எல்லை மீறிவிட்டோம். இது நடப்பது இயல்பானதுதான்" எனக் கூறினார்.