Skip to main content

கொல்கத்தா அணி படைத்த இரு வித்தியாசமான சாதனைகள்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

kkr

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்தது மூலம், கொல்கத்தா அணி இரு வித்தியாசமான சாதனைகளைப் படைத்துள்ளது.

 

13-ஆவது ஐ.பி.எல் தொடரின் 39-ஆவது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணிமுதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய கொல்கத்தா அணி  20 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் குவித்தது. பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 13.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இப்போட்டியில், கொல்கத்தா அணி 50 ரன்களை 15-ஆவது ஓவரில் எட்டியது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 50 ரன்களைக் கடப்பதற்கு அதிக ஓவர்களை எடுத்துக் கொண்ட அணி எனும் மோசமான சாதனையை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது.

 

மேலும் 20 ஓவர்கள் விளையாடி 84 ரன்கள் எடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் களத்தில் முழுமை செய்து, ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன்களாக இது பதிவாகியுள்ளது.