4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில், டெல்லி மைதானத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்களை எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக க்ஹஸ்மத்துல்லா 80 ரன்களையும், அஸ்மத்துல்லா 62 ரன்களையும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணிக்கு 273 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும், ஷர்துல், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.