Published on 14/04/2018 | Edited on 14/04/2018

ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்துவரும் காமென்வெல்த் போட்டியில் ஒரே நாளில் இந்தியா வீரர்கள் மூன்று தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ் ராஜ்புத் ஆடவருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

மேலும் மகளிருக்கான 45,48 எடை பிரிவிலான குத்துசண்டை போட்டியில் வட அயர்லாந்து வீரரை வென்று மேரிகோம் தங்கம் வேற்றுள்ளார். அதேபோல் 52-கிலோ எடை குத்துசண்டைபிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி தங்கம் வென்றுள்ளார். ஆடவர் 46-கிலோ குத்துசண்டை பிரிவில் இந்திய வீரர் அமித் வெளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இதுவரை 20 தங்கம்,13 சில்வர்,14 ப்ரோன்ஸ் என மொத்தம் 47 பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.