Skip to main content

"யார் சிறந்த கேப்டன்?..." அணி தேர்வு முறையை கடுமையாகச் சாடிய காம்பீர்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

gambhir

 

 

சிறந்த கேப்டன் என்றால் அது ரோகித் ஷர்மாதான் என்று கூறிய கவுதம் காம்பீர், இந்திய அணியின் தேர்வு முறை குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி கோப்பையை வென்றது. ரோகித் ஷர்மா வழிநடத்தும் அணி கோப்பையை வெல்வது இது ஐந்தாவது முறையாகும். இதனையடுத்து, இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மாவிற்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தக் கருத்திற்கு ஆதரவு கரம் நீட்டினர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் தொடர்ந்து இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

 

இதுகுறித்து அவர் பேசுகையில், "விராட் கோலி மோசமான கேப்டன் அல்ல. இங்கு பேசுபொருளே யார் சிறந்த கேப்டன் என்பதுதான். அது ரோகித் சர்மாதான். இருவருக்குமான வித்தியாசம் பெரிய அளவில் உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடியதைப் பார்த்து இந்திய அணியில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அதே அளவுகோலை வைத்து ஒருவருக்கு ஏன் கேப்டன் வாய்ப்பு வழங்கக்கூடாது. அது முடியாது எனும்பட்சத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் ஐபிஎல் என்பது அளவுகோலாக இருக்கக்கூடாது. அதிலிருந்து ஏன் வீரர்கள் தேர்வு அமைய வேண்டும்?. அது முடியாதென்கையில், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், யுகேந்திர சாஹல் ஆகிய வீரர்களின் தேர்வும் தவறே" எனக் கூறினார்.