சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமான டக்-அவுட்டுகள் ஆன இந்திய வீரர் என்ற பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
இலங்கை - இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நான்கு பந்துகளைச் சந்தித்திருந்த நிலையில், பூஜ்ஜியம் ரன்களில் பெவிலியன் திரும்பினார். மார்ச் 6, 2013 முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டக்-அவுட் ஆகியிருக்கிறார்.
இதன்மூலம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மாவோடு, பட்டியலின் முதலிடத்தை ரோகித் சர்மா பகிர்ந்துகொள்கிறார். இந்தப் பட்டியலில் புவனேஷ்வர் குமார் 11 டக்-அவுட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மாவுக்கு டி20 போட்டியில் இது ஐந்தாவது டக்-அவுட் ஆகும்.