உலகக் கோப்பையின் 36 ஆவது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (04-11-23) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக மார்ன்ஸ் லபுஷேன் 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 71 ரன்களை குவித்தார். அதே போல், கீரின் 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 47 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அதனை தொடர்ந்து, வார்னர், ஹெட் என அடுத்தடுத்த வீரர்கள் களமிறங்கிய குறைந்த ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில்,49.3 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், மார்க் வுட் மற்றும் அடில் ராஷித் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி 287 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது. இந்நிலையில் 16.2 ஓவர்களில் 64/2 என விளையாடி வருகிறது.