Published on 04/02/2022 | Edited on 04/02/2022
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தநிலையில் இந்தத் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
2021-22ஆம் ஆண்டிற்கான முதுநிலை நீட் படிப்பிற்கான கலந்தாய்வில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள், 2022-23ஆம் ஆண்டுகளுக்கான முதுநிலை நீட் தேர்வை எழுத வழிவகை செய்யும் பொருட்டு, மார்ச் 12 ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.