பெண்களுக்கு ஏற்படுகிற தொற்று நோய் பிரச்சனைகள் பற்றி நக்கீரன் நலம் யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பிரபல மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் பேசி வருகிறார். அந்த வகையில் பெண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்ப் பாதை தொற்று வராமல் தடுப்பது குறித்து அவர் பேசியவை பின்வருமாறு...
யூரினரி டிராக்கில் இன்ஃபெக்சன் வராமல் தடுப்பதற்காக முதலில் செய்ய வேண்டியது தண்ணீர் நன்றாக நிறைய குடிக்க வேண்டும். நான்கு ஐந்து லிட்டர் எல்லாம் குடிக்க வேண்டுமென்று இல்லை. ஆனால் கண்டிப்பாக இரண்டு லிட்டர் குடித்து விட வேண்டும். யூரின் போகும் பாதையில் அடைப்பு இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலம் அடைப்பு ஏற்பட்டிருந்தால் சிறுநீர் வருவதும் சிரமம் ஏற்படும். நீர்ச் சத்தும், நார்ச் சத்தும் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் இல்லாமல் ஆகும். அதனால் சிறுநீர் அடைப்பு ஏற்படாமல் இருக்கும்.
டயாப்பட்டிக் சிக்கல் உள்ளவர்களுக்கு சுகர் பேசன்ட்டுகளுக்கு யூரினரி டிராக் இன்ஃபெக்சன் ஏற்படும். வெறும் சாதாரண இன்ஃபெக்சன் மட்டுமல்லாது பிறப்பு உறுப்பைச் சுற்றி ஒரு ஃபங்கஸ் இன்ஃபெக்சன் வரும். அதாவது காளான் பூஞ்சை போன்றதொரு தொற்று, சுகர் அளவு அதிகமானால் ஃபங்கஸ் இன்ஃபெக்சனும் யூரினரி இன்ஃபெக்சனும் உண்டாகும். அதனால் சுகர் அளவை பரிசோதித்து அதை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
யூரின் வரும் போதெல்லாம் அதை வெளியேற்றி விட வேண்டும். யூரின் பேக் காலியாக வைத்திருக்க வேண்டும். நிறைய தேக்கி வைக்கக் கூடாது. கர்ப்பப் பை இரக்கம் ஏற்படுவதாலும், கருப்பை கட்டி ஏற்படுவதாலும், சிறுநீர் பாதை இன்ஃபெக்சன் ஆகும். இதையெல்லாம் பரிசோதித்து மெடிசின் எடுத்துக் கொண்டு அதை சரியாக சாப்பிட்டு வந்தால் குணமாகிவிடும். தொற்று வராமல் தடுக்க ஆண்டிபயாடிக் தருகிறோம். ஆனால் இப்போதெல்லாம் அதை மருத்துவர்களே குறைத்துக் கொள்கிறார்கள். தொற்று வராமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் சரிவிகிதமான உணவு முறையும் முக்கியமாகிறது.