உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் 2018ஆம் ஆண்டுக்கான பட்டியலை சமீபத்தில் ஐநா வெளியிட்டது. இதில் பின்லாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியா 133வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் 156 நாடுகளில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது. ஐநாவின் நிலையான வளர்ச்சிக்கான குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. உள்நாட்டு உற்பத்தி, சமூக சுதந்திரம், ஊழல் இல்லாமை, இயற்கை வளம், குழந்தைகளின் கல்வி, இலவச மருத்துவம் என்று இவைகளின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் இவை அனைத்தும் உள்ள நாடு பின்லாந்து என்று அதனை இவ்வாண்டின் மகிழ்ச்சியான நாடாக ஐ.நா தேர்ந்தெடுத்துள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்விசர்லாந்து, நெதர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன.
பின்லாந்து
இதில் சென்ற ஆண்டு 122வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது அதிலிருந்து இறங்கி 133வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு 14வது இடத்தில் இருந்த அமெரிக்கா 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிரிட்டன் 19வது இடத்திலும், சவுதி அரேபியா 20வது இடத்திலும் உள்ளது. இதில் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 75வது இடத்திலும், சீனா 86வது இடத்திலும், இலங்கை 116வது இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வானது 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதலில் 117 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பட்டியலில் ஏழு ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியா 150வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தை புருண்டி என்ற ஆப்பிரிக்க நாடு பிடித்துள்ளது.
கடந்த 2018-19 காலகட்டத்தில் 118வது இடத்தில் இருந்த இந்தியா, அதிலிருந்து பின்தங்கி இப்பொழுது 133வது இடத்துக்கு வந்திருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி, சமூக சுதந்திரம், ஊழல் இல்லாமை, இயற்கை வளம், குழந்தைகளின் கல்வி, இலவச மருத்துவம் போன்ற காரணிகளில் தொடர்ந்து பின்னோக்கி செல்வதை இது உணர்த்துகிறதா என்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு கவனிக்க வேண்டும்.