ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு சான்றாக, ஏராளமான பெண்களை கூறமுடியும். இத்தகைய பெண்களில் ஒருவர் தான் உலகமே வியந்து போற்றிடும் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. "உலக மானுட குலத்தை பாதுகாக்க தனது இன்னுயிரை திறந்து மகத்தான பெண்! இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்" என்று கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப உலக மக்களின் மனங்களில் ஊன்றிவிட்டிருப்பவர். எனினும் அச்செயலை நினைவு கூறும் வகையில் விருதுநகரில் யோகாசனத்தில் உலக சாதனை படைத்த 3-ம் வகுப்பு பள்ளி மாணவி நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
விருதுநகர் செவல்பட்டியில் உள்ள தாமு மெமோரியல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 3- ம் வகுப்பு படிக்கும் மாணவி முஜிதா. இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யோகாசனத்தில் பயிற்ச்சி பெற்றுள்ளார். கடந்த சில போட்டிகளில் கலந்து கொண்டு முஜிதா தேசிய மற்றும் மாநில அளவில் பல சாதனைகள் படைத்துள்ளார். அதன் ஒரு முயற்சியாக யோகாவில் கண்டபேருண்டாசனம் செய்தவாறு முன்னால் உள்ள பத்து முட்டைகளை 47 வினாடிகளில் கிண்ணத்தில் தனது இருகால்களால் எடுத்து வைத்து உலக சாதனை படைத்து நோபல் ரெக்கார்ட்ஸ்சில் இடம்பிடித்தார். இதற்கு முன்னால் 20 நொடிகளில் 6 முட்டையை கோவையை சேர்ந்த 6-ம் வகுப்பு வைஷ்னவி என்ற பள்ளி மாணவி சாதனை படைத்தார். அதை விருதுநகரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி 47 நொடிகளில் 10 முட்டையை கிண்ணத்தில் எடுத்து வைத்து சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவிக்கு நோபல் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
பா.விக்னேஷ் பெருமாள்.