ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்
நாம் சந்தோஷமாக இருக்கும்போது நம்முடைய உடலில் செரடோனின் என்கிற ஹார்மோன் வேலை செய்யும். சோகமாக இருக்கும்போது வேலை செய்யாது. குழந்தைகளுக்கு செரடோனின் வேலை செய்வதற்கு அவர்களுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு அது நிச்சயம் புரியும். அவர்களோடு நீங்கள் விளையாடும்போது அவர்களும் உங்களோடு விளையாட முயற்சிப்பார்கள். அவர்களுடைய சகோதரர்களுடன் அவர்கள் பழகும்போது, தாங்களும் சகோதரர்கள் போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள்.
உணவில் மீன் வகைகளை அவர்களுக்கு நாம் கொடுக்கலாம். நிறைய பழங்கள் தர வேண்டும். அவர்களுக்கு வாழைப்பழம் கொடுக்கக் கூடாது. மைதா சம்பந்தப்பட்ட உணவுகளை நிச்சயம் அவர்களுக்கு வழங்கக் கூடாது. மைதாவால் இந்தக் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அந்த நேரங்களில் அவர்கள் கத்துவார்கள், என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பார்கள். பிஸ்கட்டுகளிலும் கிரீம் சேர்த்த பிஸ்கட்டுகளைக் கொடுக்க வேண்டாம். சிறுதானிய வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்கலாம்.
அவல் வகைகளை அவர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் செரிமானம் எளிதாக நடக்கும். இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு உணவை வழங்கிட வேண்டும். உணவில் அவர்களுக்கு பழங்கள், காய்கறிகளை நிச்சயம் சேர்க்க வேண்டும். சோயா சேர்க்கக் கூடாது. மதிய உணவில் நிறைய காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 நிறைந்த உணவுகளை நிறைய கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவில் நிச்சயம் மோர் சேர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்துக்கள் நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.
நல்ல உணவு கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் விரைவாக நடக்கும். கலர் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். சாக்லேட்டுகளை அவர்களுக்கு நிறைய வழங்கக் கூடாது. ஐஸ்கிரீம்களையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். செயற்கையான, கெமிக்கல்கள் நிறைந்த உணவுகளை அந்தக் குழந்தைகளுக்கு வழங்குவது தவறு. எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளையே அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.