உலகிலேயே மிகவும் நீளமான கொசு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பகுதியில் உள்ளது சேங்க்டூ. இங்குள்ள மவுண்ட் குவின்செங் வனப்பகுதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா சென்றவர்கள், பறவைக்கு நிகராக நீளமான கொசுவைக் கண்டுபிடித்துள்ளனர். உலகின் மிக நீளமான இந்த வகை கொசுக்களை ஹோலோருசியா மிகாடோ என அழைக்கப்படுகின்றன. தற்போது இந்தக் கொசு சீனாவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜப்பானில் இதே இனத்தைச் சேர்ந்த கொசு கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதன் இறக்கை நீளம் வெறும் 8 செமீ மட்டுமே இருந்தது. தற்போது கிடைத்திருக்கும் இந்தக் கொசுவின் இறக்கை நீளம் 11.15 செமீ என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு பெரியதாக, அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், இந்தவகைக் கொசுக்கள் ரத்தம் குடிப்பதில்லை. மாறாக தேனை உறிந்து குடித்து உயிர்வாழ்கின்றன. மேலும், இவற்றின் வாழ்நாள் சில நாட்களே ஆகும். உலகில் பல ஆயிரக்கணக்கான கொசுக்கள் இருந்தாலும், நூறு இனங்களைச் சேர்ந்த கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடித்து தொல்லை செய்கின்றன.