உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93,45,569 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,78,949 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 50,36,723 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 36,015 பேருக்கு கரோனா உறுதியானதால், பாதிப்பு 24,24,168 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 5,99,705, ஸ்பெயினில் 2,93,832, பிரிட்டனில் 3,06,210, இத்தாலியில் 2,38,833, பிரான்ஸில் 1,57,716, பெருவில் 2,60,810, ஜெர்மனியில் 1,92,778, துருக்கியில் 1,90,165, சிலியில் 2,50,767, ஈரானில் 2,09,970, சீனாவில் 83,418 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலில் ஒரே நாளில் 40,131 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு 11.51 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,364 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 52,771 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 863 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,23,473 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 8,359, பெருவில் 8,404, ஸ்பெயினில் 28,325, பிரிட்டனில் 42,927, பிரேசிலில் 31,278, இத்தாலியில் 34,675, சிலியில் 4,505, பிரான்ஸில் 29,547, ஜெர்மனியில் 8,986, துருக்கியில் 5,001, ஈரானில் 9,863 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.