உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,50,119 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,54,241 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,71,577 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 7,09,735 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஸ்பெயினில் 1,90,839, இத்தாலியில் 1,72,434, பிரான்சில் 1,47,969, ஜெர்மனியில் 1,41,397, பிரிட்டனில் 1,08,692, சீனாவில் 82,719, ஈரான் 79,494, துருக்கி 78,546, பெல்ஜியம் 36,138, பிரேசில் 34,221, கனடாவில் 31,927 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானில் 7,025, மலேசியாவில் 5,251, சிங்கப்பூரில் 5,050, இலங்கையில் 244, சவுதி அரேபியாவில் 7,142, ஐக்கிய அரபு அமீரகத்தில் 6,302, கத்தாரில் 4,663 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,535 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 37,154 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 22,745, ஸ்பெயினில் 20,002, பிரான்சில் 18,681, ஜெர்மனியில் 4,352, பிரிட்டனில் 14,576, சீனாவில் 4,632, ஈரானில் 4,958, துருக்கியில் 1,769, பெல்ஜியத்தில் 5,163, பிரேசிலில் 2,171, கனடாவில் 1,310, பாகிஸ்தானில் 135, மலேசியாவில் 86, சிங்கப்பூரில் 11, இலங்கையில் 7, சவுதி அரேபியாவில் 87, ஐக்கிய அரபு அமீரகத்தில் 37, கத்தாரில் 7 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு ரூபாய் 64 கோடி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.