புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று இரவு பூஞ்ச் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்தியா சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இன்று காலை தீவிரவாதிகளுடன் நடைபெக்டர் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 3 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர் எனவும், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகம் வாழும் கனடா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இன்று முற்றுகையிடப்பட்டது. இந்திய கனட மக்கள் சங்கம் நடத்திய இந்த போராட்டத்தால் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பதாகைகள் ஏந்தப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன.