Published on 26/02/2019 | Edited on 26/02/2019

ஐ.எஸ் அமைப்பை குறிவைத்து உலகம் முழுவதும் அமெரிக்கா பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுகிழமை சோமாலியா எத்தியோப்பியா எல்லையில் அமெரிக்கா வான் படை நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது. அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவர்கள் ஐ.எஸ் மாற்று அல் கொய்தா இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்த அதிகாரபூர்வ தகவலை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது.