உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,98,111 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,604 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,78,659 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,13,886 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் ஒரே நாளில் 26,945 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,047 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் சுமார் 2,407 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் 1,74,060, இத்தாலியில் 1,62,488, பிரான்ஸில் 1,43,303, ஜெர்மனியில் 1,32,210, பிரிட்டன் 93,873, சீனா 82,295, ஈரான் 74,877, துருக்கி 65,111, கனடாவில் 27,063, பாகிஸ்தானில் 5,837, மலேசியாவில் 4,987, சிங்கப்பூரில் 3,252, இலங்கை 233, சவுதி அரேபியாவில் 5,369, ஐக்கிய அரபு அமீரகத்தில் 4,933, கத்தாரில் 3,428 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் 21,067, ஸ்பெயினில் 18,255, பிரான்சில் 15,729, பிரிட்டனில் 12,107, ஈரான் 4,683, ஜெர்மனி 3,495, சீனா 3,342, துருக்கி 1,403, கனடாவில் 903, பாகிஸ்தானில் 96, மலேசியாவில் 82, சிங்கப்பூரில் 10, இலங்கையில் 7 , சவுதி அரேபியாவில் 73, ஐக்கிய அரபு அமீரகத்தில் 28, கத்தாரில் 7 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.