வேலை பளு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் 12 பேரை கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அந்த நபர் நேற்று திடீரென துப்பாக்கியுடன் அலுவலகத்தினுள் நுழைந்துள்ளார். அங்கு தன் கண்ணில் பட்ட சக ஊழியர்கள் மீது சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேரை சுட்டு கொன்ற நிலையில் அங்கு காவலுக்கு இருக்கும் காவலர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் அந்த ஊழியர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 13,149 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதில், 307 சம்பவங்கள் பெரியது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.