Skip to main content

பகலை இருளாக்கிய பிங்க் நிற மேகங்கள்... பேரழிவு அச்சத்தில் பொதுமக்கள்...

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் ஜப்பானைத் தாக்க உள்ள நிலையில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மோசமான மழையை அந்நாடு சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று ஜப்பானின் பல பகுதிகளில் வானம் பிங்க் நிறத்தில் காட்சியளித்ததால் மக்கள் கடும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

 

typhoon hagibis latest update

 

 

இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடான ஜப்பான் நிலநடுக்கம், புயல் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கலால் பல முறை கடுமையான அழிவுகளை சந்தித்துள்ளது. ஹகிபிஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், இதனால் அதிகப்படியான கனமழை, அதிவேகமான மோசமான காற்று, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் என அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலுக்குப் பின், அந்நாடு சந்திக்கப்போகும் மிகப்பெரிய புயலாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜப்பான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்தநிலையில் வானம் பிங்க் நிறமாக மாறியுள்ளதால் மிக கடுமையான மழை ஏற்பட்டு கடுமையான சேதம் ஏற்படும் என்பதால் ஜப்பான் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்