Published on 02/04/2020 | Edited on 02/04/2020
கரோனா வைரஸ் எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது என்பதால், உலகின் வளர்ந்த நாடுகளே இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றன. கரோனாவில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழி சமூகத்தில் இருந்து விலகி இருப்பது மட்டுமே என்பதால், அனைத்து நாடுகளும் மக்களுக்கு இதையே வலியுறுத்துகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டாலும், கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலகில் இதுவரை 50,239 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் 9,80,503 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,06,264 பேர் அந்த வைரஸில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர்.