அதிக சம்பளம் வாங்கும் உலக தலைவர்களின் டாப் 10 லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியம் மற்றும் CIA World Factbook அமைப்புகளின் தரவுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தை சிங்கப்பூர் பிரதமர் பிடித்துள்ளார்.
உலகில் அதிகம் சம்பளம் பெரும் தலைவர்களின் 2018 ஆம் ஆண்டுக்கான டாப்-10 பட்டியல்...
10 - சேவியர் பெட்டல் - லக்சம்பர்க் பிரதமர் $278,035 (சுமார் ரூ.2 கோடி)
9 - செபாஸ்டியன் குர்ஸ் - ஆஸ்திரியாவின் முன்னாள் அதிபர் $328,584 (சுமார் ரூ.2.36 கோடி)
8 - முகமது ஓல்ட் அப்தெல் அஜீஸ்- மவுரித்தேனியாவின் தலைவர் $330,000 (சுமார் ரூ.2.37 கோடி)
7 - ஜசிந்தா ஆர்டெர்ன் - நியூசிலாந்து பிரதமர் $ 339,862 (சுமார் ரூ.2.44 கோடி)
6 - ஏஞ்சலா மேர்க்கெல் - ஜெர்மனியின் அதிபர் $ 369,727 (சுமார் ரூ.2.66 கோடி)
5 - ஸ்காட் மோரிசன் - ஆஸ்திரேலியாவின் பிரதமர் $378,415 (சுமார் ரூ.2.72 கோடி)
4 - டொனால்ட் டிரம்ப் - அமெரிக்க அதிபர் $400,000 (சுமார் ரூ.2.88 கோடி)
3 - யூவெலி மவ்ரேர் - சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் $482,958 (சுமார் ரூ.3.47 கோடி)
2 - கேரி லாம் - ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி $568,400 (சுமார் ரூ.4.09 கோடி)
1 - லீ ஹ்சியன் லூங் - சிங்கப்பூர் பிரதமர் $1,610,000 (சுமார் ரூ.11.59 கோடி)