Published on 16/02/2021 | Edited on 16/02/2021

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைக் கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது. இந்தப் பனிப்புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2 மில்லியன் மக்கள், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எப்போது மின்சாரம் மீண்டும் கிடைக்கும் என்கிற நிச்சயமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பனிப்புயலால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும், தடுப்பூசியை சேமித்து வைக்கும் வசதியும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பனிப்புயலையடுத்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பனிப்புயலால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, சாலைகளிலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்று அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.