Skip to main content

'கழிப்பறையில் கணினி... 15 நிமிடத்திற்கு மேல் அமர்ந்திருந்தால் அலாரம்' ஆச்சரியப்படுத்தும் சீனா!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

சீனாவின் இமாமி மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான 150 ஸ்மார்ட் பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிவறைக்கு வெளியே மிஷின் பொருத்தப்பட்டுள்ளது. அதில், அந்த கழிவறையை ஒருநாளைக்கு எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? ஒரு நபர் எத்தனை மணி நேரம் உள்ளே இருக்கிறார் போன்ற தகவல்கள் சேமிக்கப்படுகிறது. மேலும் அந்த கருவி, டாய்லெட்டின் சுத்தம், தண்ணீர் இருப்பு முதலியவற்றையும் தெரிவிக்கிறது. மேலும் 15 நிமிடத்துக்கு மேல் யாராவது உள்ளே அமர்ந்தால் அலாராம் அடிக்கு தொழில் நுட்பம் இதில் உள்ளது.

சீனா தொழில்நுட்பத்தில் உருவான இந்த கருவியை தற்போது சோதனை முயற்சியாக பயன் படுத்தப்படுவதாகவும், இது மக்களிடம் வரவேற்பை பெற்றால் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல் படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது நல்ல யோசனை தான் என்றாலும், அவசர காலகட்டத்தில் நீண்ட நேரம் உள்ளே அமர நேர்ந்தால் அப்போது இப்படி அலாரம் அடித்தால் மிகவும் சங்கடமாக இருக்குமே என பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்