பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 'அனுஸர்- புச்' என்ற மதுபான நிறுவனம், பட்வெய்சர், கரோனா வகை பீர்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் நாய்களுக்கான பீர் வகையை கடந்த வருடம் அறிமுகம் செய்தது. நாய்களுக்காக தயாரிக்கப்படும் பீர்களில் ஆல்கஹால் சேர்க்கப்படுவதில்லை.
நாய்களுக்கான இந்த பீர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து நாய்களுக்காக விதவிதமான பீர்களை தயாரிக்க அனுஸர்- புச் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பீரை ருசித்து, அதன் தரத்தை தெரிவிக்கும் தரக்கட்டுப்பாட்டுப் பணிக்கு நாய் ஒன்றைப் பணியில் அமர்த்த அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக அந்த நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பணிக்கு தேர்வு செய்யப்படும் நாய்க்கு, மாதம் 15 லட்சம் ரூபாய் சம்பளமும், 60 ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் "40 டாக் ப்ரூவ் டின் பீர்" வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.