Published on 23/04/2019 | Edited on 23/04/2019
இலங்கையில் 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 500 பேர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு பதற்றத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் கொழும்பு நகருக்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக வெளியான தகவலால் இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த தகவலால் கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.