ஐ.நா.வில் நல்லெண்ண தூதராக தமிழகத்தை சேர்ந்த பத்மலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவின் மேன்ஹாட்டன் பகுதியில் வசித்து வருகிறார். எழுத்தாளர், சமையல் கலைஞர்,நிகழ்ச்சி தயாரிப்பாளர், சமூக செயல்பாட்டாளர் என பல முகம் கொண்ட இவருக்கு தற்போது இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
48 வயதான இவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மனைவியாவார். நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு பத்மலட்சுமியை நல்லெண்ண தூதரக ஐ.நா சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிருபர்கள் மத்தியில் பத்மலட்சுமி பேசுகையில், “ பல நாடுகளில் வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமத்துவமின்மையை இன்னும் ஒழிக்க முடியவில்லை. சமத்துவமின்மை இன்றும் நம் சமூகத்தில் இருக்கிறது. ஐ.நா. வளர்ச்சி திட்டத்தின் நல்லெண்ண தூதர் என்ற வகையில், எனது முக்கிய கவனம், சமத்துவம் இல்லாத நிலை, பணக்கார நாடுகளில் மட்டுமல்ல ஏழை நாடுகளிலும் உள்ளது, இது மக்களை பாதிக்கக்கூடும் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுவேன்” என குறிப்பிட்டார்.