Skip to main content

அமெரிக்காவில் புயல் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இந்தியர்களின் சீரமைப்பு பணிகள்(படங்கள்)

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
அமெரிக்காவில் புயல் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இந்தியர்களின் சீரமைப்பு பணிகள்(படங்கள்)



உலகின் வல்லரசாக பெருமை கொள்ளும் அமெரிக்கா நாட்டில் ஹூஸ்டன் மாநகரத்தை புரட்டி உருட்டி போட்டு விட்டது ஹார்வி புயல். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொட்டிய மழையால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. ஒரு வருடம் முழுவதும் பெய்யும் மழையை மூன்றே நாளில் 54 இன்ச் மழை கொட்டித்தீர்த்து. அமெரிக்காவின் வரலாற்றில் இதுதான் அதிகப்படியான மழை என பதிவு செய்யப்பட்டது. நகரின் முக்கிய குடியிருப்புகளில் இருந்து மக்களை கட்டாயமாக கொட்டும் மழையில் வெளியேற்றப்பட்டனர். இராணுவம் வரவழைக்கப்பட்டது. படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு காப்பற்றப்பட்டனர். வீதிகளில் சாலைகளில் கார்கள் மிதந்து சென்றது. முதலை பாம்பு போன்றநீர்வாழ் உயிரினங்கள் வெள்ளத்தில் மிதந்தது வீட்டுக்குள் நுழைந்தது. 
வீட்டுக்குள் இருந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்து வெளியேறியதுடன் அனைத்துப் பொருட்களும் சேதமானது. கெமிக்கல் தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்து விஷவாயு கசிந்து மக்களை அச்சுறுத்தியது. 

ஹூஸ்டன் நகரில் புயலால் பாதிக்கப்பட்ட கம்போடிய காலனி மற்றும் பல குடியிருப்பு பகுதிகளில் பெருமாள் அண்ணாமலை ஒருங்கிணைப்பில் களமிறங்கிய ஹூஸ்டன் தமிழ் நண்பர்கள் குழு, எம்பசிஸ் கார்ப்பரேசன் கம்பெனி மற்றும் பாரதி கலை மன்றம் சார்பில் தன்னார்வல்கள் இறங்கி மீட்பு பணி மற்றும் உணவு உடை வழங்கியதுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல இந்தியர்கள் தமிழர்கள் பல இடங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எம்பஸிஸ் கார்ப்பரேட் மூத்த தலைவர்கள் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து நேரில் வருகை தந்து தன்னார்வர்களின் பணியை ஊக்கப்படுத்தினர். 

பியர்லேண்ட் மேயர் டாம்  எம்பஸிஸ் கார்ப்பரேட் மூத்த தலைவர்களை நேரில் பாரட்டி கௌரவித்தார். சாம்.கண்ணப்பன் இந்திய மியூசியத்தில் இச்சந்திப்பை ஏற்படுத்தி தந்து மதிய உணவு விருந்து அளித்து தொடர்ந்து நிவாரனப் பணிகள் செய்ய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
    
மற்றும் கடந்த சில நாட்களாக புளோரிடா மாநிலத்தில் புயல் மையம் கொண்டு மாநிலத்தையே அச்சுறுத்தும் இர்மா புயலால்  42 லட்சம் மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு செல்போன் தொடர்புகள் இல்லாமல் துண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். உயிர் சேதங்கள் முழுமையாக தெரியவில்லை என்றாலும் பொருள் சேதம் ஈடுகட்ட முடியாத சேதமடைந்துள்ளது. அதிபரின் அரசு உதவிக்காக காத்திருக்காமல் தாங்களே உதவிக் கொள்ளுங்கள் மக்களே மீட்பு பணியில் ஈடுபடுங்கள் என்று அழைப்பு கொடுத்துள்ளார்.
   
-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்