நியூஸிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலின் வீடியோவை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்த நபர் ஒருவருக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நியூஸிலாந்து நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
51 பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதலை நடத்தியவன் இந்த தாக்குதலை ஃபேஸ்புக்கில் லைவ் செய்த நிலையில் இந்த வீடியோவை தாக்குதல் நடைபெற்ற 29ஆவது நிமிடம் ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கியது. இந்த வீடியோவை அப்போது 200 பேர் மட்டுமே பார்த்திருந்தனர்.
ஆனால் பிலிப் நெவில் என்பவர் இந்தப் பயங்கரவாத தாக்குதல் வீடியோவை 30 பேருக்கு அனுப்பியுள்ளார். நியூசிலாந்து நாட்டின் சட்டத்தின்படி ஆட்சேபனைக்குரிய வீடியோவை ஒருவர் மற்றொரு நபருக்கு அனுப்பினால் 14 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அந்த வகையில் வீடியோவை ஷேர் செய்த நபருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.