அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் (PMLA - Prevention of Money Laundering Act of 2002) கீழ் அமலாக்கத் துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தின் மூலம் தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னையில் அமைந்துள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களைச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட விதிகளின்படி தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்குச் சொந்தமானது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பணமோசடி தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டார் எனத் தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.