Published on 26/06/2019 | Edited on 26/06/2019
பாகிஸ்தானில் சீக்கிய மத மக்கள் நீண்ட காலமாக தங்களது சமூகத்தினருக்காக தனியாக பள்ளி ஒன்றை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கான அனுமதி கேட்டும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் முதன்முறையாக சீக்கியர்களுக்கான தனி பள்ளி அமைய அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
2019-20 வருடாந்திர பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, சிறுபான்மை விவகார துறைக்கு ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. இதேபோன்று சிறுபான்மை சமூகத்தினரின் திருவிழாக்களை நடத்துவதற்காக ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெஷாவர் நகரில் அமையவுள்ள முதல் சீக்கிய பள்ளிக்கான கட்டிடம் கட்டும் பணிக்காக ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.