போலந்து நாட்டில் குதிரையில் வெந்நீரில் குளிக்க வைத்தற்காக குதிரையின் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலந்தில் உள்ள மாகோவ் மாசோவிக்கி நகரத்தில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு, குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டு ஒரு நபர் வந்துள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த குழாயைப் பயன்படுத்தி, வெந்நீரைக் கொண்டு அந்த குதிரையை உரிமையாளர் குளிக்க வைத்தார்.
வெந்நீரின் வெப்பநிலையை தாங்க முடியாத அந்த குதிரை, அங்கும் இங்கும் துள்ளி குதித்தது. மேலும், அங்கு இருந்த சுவரை இடித்தது. வெப்பத்தை தாங்க முடியாத அந்த குதிரை ஒரு கட்டத்தில் சரிந்து கீழே விழுந்தது. இது தொடர்பான வீடியோ, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்நாட்டு காவல்துறை குதிரை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தியது.
குதிரை கொடுமைப்படுத்தியதால் அந்த நபர் மீது விலங்கு நல வாரியம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. மேலும், பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான நடந்த வழக்கு விசாரணையில், அந்த நபருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.