Published on 27/02/2019 | Edited on 27/02/2019
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் உலக மொபைல் மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொண்ட சொபியா எனும் செயற்கை நுண்ணறிவுகொண்ட பெண் ரோபோ, 5ஜி தொழில்நுட்பம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு குறித்தும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தியது.

இந்த மாநாட்டில் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
சொபியா ரோபோ, 2016-ம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு வந்தது. இதை ஹாங் காங் நாட்டைச் சேர்ந்த ஹான்சான் ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்தது. உலகிலே குடியுரிமை பெற்ற முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ சொபியா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சவுதி அரேபிய நாடு குடியுரிமை வழங்கியுள்ளது.