Skip to main content

வாஷிங்டன் போஸ்ட்டில் நக்கீரன் ஆசிரியர் கைது பற்றிய செய்தி...

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
washington


நக்கீரன் ஆசிரியரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.  வழக்கில் இருந்து ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டார். ஐபிசி 124 பிரிவின் கீழ் நக்கீரன் ஆசிரியர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.  ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்தார் நீதிபதி.
 

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின்  துணைச்செயலாளர் செங்கோட்டையன்,  நக்கீரன் இதழின் ஏப். 22 இதழில் ‘பூனைக்கு மணிக்கட்டிய நக்கீரன், பொறியில் சிக்கிய கவர்னர்! சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாவுக்கு ஆபத்து’ என்ற வாசகத்துடன் ஆளுநரின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டு கட்டுரை வெளியாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரின் அடிப்படையில்  நக்கீரன் ஆசிரியர் மீது பிரிவு ஐபிசி 124-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,  இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.   
 

கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.   பின்னர்,  திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நக்கீரன் ஆசிரியர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.    ஊடக பிரதிநிதியாக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் நேரில் ஆஜராகி 124 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு  எதிராக வாதாடினார்.  
 

ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்தார் நீதிபதி கோபிநாத். வழக்கில் இருந்து ஆசிரியரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 

விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் ஆசிரியர்,   ‘’   ராஜ்பவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி நக்கீரனுக்கு வருகிறது.  அதை நாங்கள் புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம். அதற்காக கைது செய்யப்பட்டேன்.  இறுதியில் கருத்துச்சுதந்திரம் வென்றது.  இதற்காக துணைநின்ற அனைவருக்கு நன்றி.  என் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து ஊடகத்துறையினருக்கும்,  தலைவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.   நக்கீரனின் பணி தொடரும்’’என்று தெரிவித்தார். 
 

இச்செய்தியை அமெரிக்க பத்திரிகை நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட், இந்தியாவைச் சேர்ந்த தமிழக புலனாய்வு பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவித்திருந்தது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரு நாளுக்கு 39; ஆட்சிக்காலத்தில் 30ஆயிரம் - பொய்யாக கூறித்தள்ளிய ட்ரம்ப்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

donald trump

 

முன்னாள் அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்ப், தன் ஆட்சி காலத்தில், 30,573 பொய்யான அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய செய்திகளைத் தெரிவித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

இந்த 30 ஆயிரம் பொய்களில், பாதிக்கும் மேற்ப்பட்ட பொய்களை அவர் தனது பதவியின் இறுதியாண்டில் கூறியுள்ளார். பதவியேற்ற முதல் வருடத்தில், ஒரு நாளைக்கு 6 பொய்களையும், இரண்டாம் வருடத்தில் ஒருநாளைக்கு 16 பொய்களையும், மூன்றாம் வருடத்தில் ஒரு நாளைக்கு 22 பொய்களையும் சராசரியாக கூறியுள்ள ட்ரம்ப், இறுதியாண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 39 பொய்களைத் தெரிவித்துள்ளார்.

 

முதல் 10 ஆயிரம் பொய்களைக் கூற ட்ரம்பிற்கு 27 மாதங்கள் எடுத்துள்ளது. அடுத்த 10 ஆயிரம் பொய்களை 14 மாதத்தில் கூறிய ட்ரம்ப், கடைசி 10 ஆயிரம் பொய்களை ஐந்து மாதங்களுக்கு குறைவான காலத்தில் கூறி மிரளவைத்துள்ளார்.

 

"உலகின் சிறந்த பொருளாதாரத்தை நாம் கட்டமைக்கிறோம்" என்பதே ட்ரம்ப் அதிக முறை கூறிய பொய்யாகும். ட்ரம்ப் இந்தப் பொய்யை 493 முறை கூறியுள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கூறியுள்ளது. ட்ரம்பின் பொய்களையும் அதற்கான ஆதாரங்களையும் ஒரு தனி 'டேட்டாபேஸாக (database) உருவாக்கியுள்ள வாஷிங்டன் பத்திரிகை, அதனை பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வரி என பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தியுள்ளது.

 

Next Story

குழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை? - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்

Published on 14/12/2018 | Edited on 14/12/2018
pregnant


வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க பத்திரிகை நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜில்லியன் பிராக்கல் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு ஹேஸ்டேக் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட சமூக வலைதள நிறுவனம், பிரசவம் மற்றும் குழந்தைகள் சம்மந்தமான பொருட்கள் என்று விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளது. 
 

இணைய பயன்பாட்டாளர்களுக்கு காட்டப்படும் விளம்பரங்கள் பல, அவர் என்ன பொருட்களை பற்றி தேடுகிறார் என்பதை தெரிந்துகொண்டும், சமூக வலைதளத்தில் அவருடைய பதிவுகளின் வெளிப்பாட்டை தெரிந்துகொண்டுதான் காட்டப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை வைத்துதான் விளம்பரத்திற்கான அல்காரிதத்தை அமைக்கிறது சமூக வலைதள நிறுவனங்கள். 
 

இந்த அல்காரித அமைப்பில் ஜில்லியன் பிராக்கல்லுக்கும் விளம்பரங்கள் காட்ட, அவரும் அதனுள் சென்று சில விஷயங்களை எல்லாம் தேட ஆரம்பித்திருக்கிறார். இதனால் ஜில்லியனுக்கு தேவை இருக்கிறது என்று பிரசவம் மற்றும் குழந்தை சம்மந்தமான விளம்பரங்களையே காட்டப்பட்டுள்ளது. ஜில்லியனுக்கு பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனால் மிகவும் மனம் நோந்துபோன நிலையில் மூன்று நாட்களாக மொபைல் பயன்படுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, அந்த துயர சம்மபவத்திலிருந்து மீண்டு வருவோம் என்று மனதை உறுதிப்படுத்திகொண்டு செயல்பட இருக்கும்போது, இணையத்தை பயன்படுத்தும் போதெல்லாம் பிரசவம், குழந்தைகள் சம்மந்தமான விளம்பரங்களே மீண்டும் வந்திருக்கிறது. இதனால் மீண்டும் மனம் நொந்துபோனவர், இணையத்திலேயே இந்த துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு தேடியும் உள்ளார். ஜில்லியனின் நண்பர்கள் பலரும் சமூக வலைதளத்தில், இறந்த குழந்தைக்காக வருத்தமும் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் முன்பு வந்த அதே மாதிரியான விளம்பரங்கள் வந்துகொண்டு இருந்திருக்கிறது. கோபமடைந்த ஜில்லியன் சமூக வலைதளங்கிடம் இதுகுறித்து பேசியே தீர வேண்டும் என்று ட்விட்டர் வழியாக வெளிப்படையாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.


 

 

“உங்களுக்கு நான் பிரசவமாக இருக்கிறேன் என்பது எனக்கு நன்கு தெரியும். என்னால் அந்த ஹேஸ்டேகுகளை தவிர்க்க முடியவில்லை, அதில் நான் பிரசவமாக இருக்கிறேன் என்பதை தெரிந்துகொண்டு என்னை டிரேஸ் செய்ய தொடங்கிவிட்டீர்கள். நானும் பேஸ்புக்கில் வந்த விளம்பரங்களில் பிரசவமாக இருக்கும் பெண்கள் அணியும் உடைகள் பற்றியான விளம்பரங்களை ஒருமுறையோ இரண்டு முறையோ உள்ளே சென்று பார்த்தேன். நான் என்ன சொல்வது. உங்களுடைய பன்பாட்டாளர்.
 

சமூக வலைதளத்தில் என் சீமந்தத்தின்போது வாழ்த்து தெரிவித்த பலருக்கும் நான் நன்றி தெரிவித்திருப்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள். பிரசவத்தின்போது அணியும் உடையபற்றி கூகுள் செய்யும்போது தெரிந்துகொண்டீர்கள். இவ்வளவு ஏன் அமேசான் என்னுடைய பிரசவ தேதியை முதல் தெரிவித்தது. 
 

ஆனால், குழந்தை நகரவில்லை என்று நான் கூகுளில் தேடியதை நீங்கள் பார்க்கவில்லையா? எப்போதும் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் நான், மூன்று நாட்களாக சமூக வலைதளம் பக்கமே வராமல் இருந்தேன் அதை பார்க்கவில்லையா? குழந்தை இறந்துவிட்டது என்று என் நண்பர்கள் பதிவிட்டிருந்ததை பார்க்கவில்லையா? ஏன் இதை எல்லாம் உங்களால் ட்ரேக் செய்யமுடியாதா?
 

உங்களுக்கு தெரியுமா, அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 24,000 குழந்தைகள்பிரசவத்தின்போதே இறந்து பிறக்கிறது. உலகம் முழுவதும் இணையத்தை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். உங்களிடம் ஒன்று சொல்லவா, நானும் எனது கணவரும் மூன்று நாட்கள் அழுதுகொண்டே இருந்து, பிறகு அந்த விஷயத்திலிருந்து மீண்டு வரலாம் என்று மொபைலை எடுத்தால் அதில் வருகின்ற விளம்பரங்கள் அனைத்தும் பிரசவத்தை பற்றியானதும் குழந்தையை பாற்றியானதுமாக இருந்து மேலும் என் மனதை சுக்குக்சுக்காக நொறுக்கிவிட்டது. 
 

மனமுடைந்த லட்சக்கணக்கான மக்கள் அந்த விளம்பரத்தை பார்க்கவில்லை என்று கிளிக் செய்தால் எதற்காக என்ற கேள்வியை திரும்பி கேட்கப்படுகிறது. அதிலும் அந்த விளம்பரம் எனக்கு சம்மந்தமில்லாதது என்று சொல்ல வேண்டி உள்ளது. அது உண்மையாக இருந்தாலும் வேதனை அளிக்கிறதே. உங்களுடைய அல்காரிதங்களாக, குழந்தை பிறந்துவிட்டது, அதுவாகவே சந்தோச செய்தியை உருவாக்கிகொண்டு, எங்களுக்கு தேவையில்லாத விளம்பரங்களை காட்டுகின்றன. அவர்கள் காட்டும் விளம்பரங்களுக்கு பதிலாக வேறு ஒன்றை நான் யோசித்து வைத்திருகிறேன். இதெல்லாம் போதாதென்று, இன்ஸுரன்ஸ் கம்பெனிகள் உங்களுடைய குழந்தைக்காக ரெஜிஸ்டர் செய்யுங்கள் என்று மெயில் அனுப்புகிறார்கள். 
 

டெக் நிறுவனங்களே உங்களிடம் நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை தெரிந்துகொண்ட உங்களது அல்காரிதங்களுக்கு, எனக்கு குழந்தை பிறந்து இறந்துவிட்டது என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கான ஸ்மார்ட் அலகாரிதங்களாக இருக்க வேண்டும். என் குழந்தை இறந்துவிட்டது என்பதை தெரிந்துகொண்டு பின்னர் அதற்கு இணங்க விளம்பரங்களை வழங்குங்கள், அல்லது வழங்காமல் போங்கள்” இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் ஜில்லியன் பிராக்கல். 
 

இந்த கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரத்துறை தலைவர் சோகமான பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் அதில், மன்னிப்பும் கேட்டுள்ளார். இதுபோன்ற விளம்பரங்கள் வராமல் இருக்க செட்டிங்கை கிளிக் செய்து, ஹைட் டாபிக்குள் சென்று பேரண்டிங் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் இதுபோன்று வராது என்றும் பேஸ்புக் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.