கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சாம்சங் நிறுவனம், தனது கேலக்ஸி எஸ்10 மாடலை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 55,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் சேர்த்து சாம்சங் நிறுவனம், எஸ் 10, எஸ்10+, எஸ் 10இ மூன்று ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடல்கள் அனைத்துமே கடந்த மாதம் சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகம் செய்யப்பட்டவை. இவை அனைத்தும் 15 நாளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ் 10+ மாடலில் 1 டிபி, 512 ஜிபி, 128 ஜிபி மெமரி கொண்டவையாக இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.1.17 லட்சம், ரூ.91,900 மற்றும் ரூ.73,900 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், கேலக்ஸி எஸ் 10 மாடலின் விலை ரூ.84,900 (512 ஜிபி), ரூ.66,900 (128 ஜிபி), எஸ் 10 இ (128 ஜிபி) ரூ.55,900 எனவும் அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.