Skip to main content

இங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிப்பு!! எதற்காகத் தெரியுமா..?

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

rat honored by england

 

கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா என்ற எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

 

விலங்குகள் ஆர்வலரான மரியா டிக்கினால் தொடங்கப்பட்ட 'நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம்' என்ற அமைப்பு கடந்த 77 ஆண்டுகளாக மனிதர்களின் நலனுக்காகச் சேவையாற்றும் விலங்குகளுக்குத் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்து வருகிறது. இதுவரை பல்வேறு நாடுகளின் ராணுவத்தில் பணியாற்றிய 34 மோப்பநாய்கள், 32 புறாக்கள், நான்கு குதிரைகள் மற்றும் ஒரு பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தங்கப்பதக்கத்தை கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா என்ற எலி பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய உடலமைப்பைக் கொண்ட ஒருவகை ஏழையான இது கடந்த நான்கு ஆண்டுகளாக கம்போடியாவில் புதைத்துவைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதில் ராணுவத்தினருக்கு உதவிவந்துள்ளது. 

 

கம்போடிய நாட்டில் பாதுகாப்புகளுக்காக 60 லட்சம் வரை கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம் பேருக்குமேல் இறந்துள்ளனர். இதனால், கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணிவெடிகளை அகற்றி வருகிறது. இதற்காக மகவா என்ற இந்த எலியை அந்நாட்டு அரசு பயன்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எலியைக் கொண்டு 39 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். மேலும், வெடிக்காத 28 ஆபத்தான பொருட்களையும் மகவா கண்டறிந்துள்ளது. மேலும், இதுவரை 1.41 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு மேல் மகவா நிலத்தைத் தோண்டியுள்ளது. எனவே இந்த எலியின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த ஆண்டிற்கான தங்கப்பதக்கத்தை மகவா எலிக்கு வழங்கியுள்ளது 'நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம்' அமைப்பு. 

 

 

சார்ந்த செய்திகள்